الْحَمْدُ لِلّهِ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَجَعَلَ الظُّلُمَاتِ وَالنُّورَ ثُمَّ الَّذِينَ كَفَرُواْ بِرَبِّهِم يَعْدِلُونَ
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்;, இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான்;, அப்படியிருந்தும் நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு(ப் பிற பொருட்களைச்) சமமாக்குகின்றனர். (அல்குர்ஆன் 6:1)

புதன், 25 நவம்பர், 2009

நடைபயிற்சி (Walking) - ஓர் சிறந்த உடற்பயிற்சி (Exercise

நடைபயிற்சி (Walking) - ஓர் சிறந்த உடற்பயிற்சி (Exercise)
உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது எனில் உடற்பயிற்சியும் சிறந்த உணவுப் பழக்கமுமே ஆகும். உணவுப்பழக்கத்தில் எல்லோருமே கவனம் எடுத்துக்கொள்கிறோம். அதுபோல உடற்பயிற்சியிலும் கவனம் எடுத்துக்கொள்ளுதல் அவசியம்.உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பரவலாக பேசப்படும் காலம். உடற்பயிற்சிக்கென்றே எல்லாவித கருவிகளுடனும் உடற்பயிற்சி மையங்கள் உருவாகிக்கொண்டிருக்கும் வேளையில் உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி எத்தனை முக்கியம் வாய்ந்தது என்பதனை ஒவ்வொருவரும் சற்றாவது அறிந்து நடைமுறைப்படுத்திக் கொள்வது சிறந்து.நகரத்து மக்களிடத்திலேயே இந்த உடற்பயிற்சிப் பழக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. 16 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகமாக உடற்பயிற்சியை செய்பவர்களாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக 29 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஆர்வம் உடற்பயிற்சியிலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விளையாட்டுகளிலும் அதிகமாகியே வருகிறது.உடற்பயிற்சி என்பது நகரத்து மக்களிடம் ஒரு நவீன பழக்கமுமாக மாறிவருகிறது. நகரத்து மக்கள் பலர் உடற்பயிற்சி மையத்திற்குச் சென்று உடற்பயிற்சியை செய்யவில்லையெனினும் சாதாரணமாக நேரத்தை ஒதுக்கி நடக்கவோ அல்லது சைக்கிள் ஓட்டுவதோ பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சைனா, நெதர்லாண்ட் மற்றும் மேற்கத்திய நாடுகளில் அலுவலக வேலைக்குச் செல்பவர்கள் பலர் வசதியான வாகனம் இருந்தும் நடந்து செல்வதையோ அல்லது சைக்கிளில் செல்வதையோ பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.நடைபயிற்சி என்பது உடற்பயிற்சிகளில் சிறந்ததும் தேவையான ஒரு பயிற்சியுமாக இருக்கிறது. இது எல்லா வயதினருக்கும் ஏற்ற பயிற்சியாகும். நடைபயிற்சியை தினமும் பழக்கமாக்கிக் கொள்வதால் உடல் இரத்த ஓட்டமானது சீராகிறது, நுரையீரல் சுவாசம் சீராகிறது, உணவு செரிமானம் சீராகிறது மேலும் இது உடலை வலுப்படுத்துவதோடல்லாமல் மூளையை நன்றாக புத்துணர்ச்சியாக்குகிறது. பிறறிடத்தில் மென்மையாக பழகும் குணத்தை வளர்க்கிறது.நடை பயிற்சி என்பது பொதுவாக தினமும் விரைவான எட்டுக்களை வைத்து 6 கிலோமீட்டர் வரை செல்வதாகும். நான்கு மணிநேரம் நீந்துவதும், நான்கு மணிநேரம் டென்னிஸ் விளையாடுவதும் இதற்குச் சமமானதே. அல்லது 20 கிலோ மீட்டர் சைக்கிள் மிதிப்பதும் இதற்குச் சமமானதே.அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் இருப்பவர்கள் லிப்ட்டைப் பயன்படுத்தாமல் ஒவ்வொரு முறையும் படிகளைப் பயன்படுத்தி ஏறி இறங்குவதாலும், வீட்டைச் சுத்தப்படுத்துதல், விளையாட்டு மைதானத்தில் சிறு குழந்தைகளுடன் விளையாடுவதாலும் நடை பயிற்சியின் தேவையை சற்று சமன் செய்து கொள்ளலாம்.நடைபயிற்சி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு பலமும் உடலின் வலுவும் அதிகரிக்கச் செய்கிறது. நடைபயிற்சியின்போது உடலிலுள்ள எல்லாத் தசைத் தொகுதிகளும் இயங்குவதால் உடலுக்கு அதிகமான ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதனால் மூச்சை சற்று அதிகப்படுத்துகிறோம். இரத்த சுழற்சியும் உடலின் எல்லாபாகங்களுக்கும் இயக்கத்தை அதிகப்படுத்தி பின் சரியாக்குகிறது.நாள்தோறும் நடைபயிற்சியை செய்வதால் உடலில் தேவைக்கதிகமான எடை குறைகிறது. இப்பயிற்சி உடலிலுள்ள மூட்டுகளை பலப்படுத்துகிறது. இதயம், நுரையீரல் ஆகியவற்றின் இயக்கம் சீராக்குகிறது.நடை பயிற்சியைப் பழக்கப்படுத்திக் கொண்டவர்கள் அன்றாடம் செய்யும் வேலைகளை சோர்வின்றி செய்ய வழிவகுக்கிறது. குறிப்பாக முதுமையடைந்தவர்கள் கூட ஆரோக்கியமாக தங்களின் இயல்பான வேலைகளைச் செய்துகொள்ளும் திறமையை வளர்த்துவிடுகிறது.அலுவலகம், வேலை, உறக்கம் மீண்டும் அலுவலகம், வேலை, உறக்கம் என்று சக்கரம்போல தினசரி வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர்களுக்கு உடற்பயிற்சி என்பது மறந்தே போய்விட்டது. சில கனமான பொருட்களை இடம்மாற்ற வேண்டுமெனினும் பிறர் உதவியை நாடுபவர்களாகிவிடுகிறார்கள்.
எனவே நடைபயிற்சியை (Walking) மேற்கொள்வோம்! இத்தகைய நிலையைத் தவிர்ப்போம்! ஆரோக்கியம் காப்போம்!

உஷார்...கண்ணா...உஷார்...

உஷார்...கண்ணா...உஷார்...
எ‌ந்த நோயு‌ம் வ‌ந்த ‌பிறகு ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்வதை ‌விட, வரு‌ம் மு‌ன் கா‌ப்பதே ‌சிற‌ந்தது எ‌ன்று கூறு‌கிறா‌ர் மூளை அறுவை ‌சி‌கி‌ச்சை ‌நிபுண‌ர் சா‌‌ர்‌லி டியோ.

ம‌‌‌னித‌ர்க‌ள் த‌ங்களது செ‌ல்போனை ல‌வ்டு‌ஸ்‌பீ‌க்க‌ரி‌ல் வை‌த்து‌ப் பேசுவது‌ம், மை‌க்ரோவேவ‌னி‌ல் வேலை முடி‌ந்தத‌ற்காக ‌பீ‌ப் ஒ‌லி எழு‌ம்‌பிய ‌பிறகு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து ‌திற‌ப்பது‌ம் ந‌ல்லது எ‌ன்று‌ம் நம‌க்கு அ‌றிவுறு‌த்து‌கிறா‌ர் இ‌ந்த புக‌ழ்பெ‌ற்ற மரு‌த்துவ ‌நிபுண‌ர்.

மூளை அறுவை ‌சி‌கி‌ச்சை‌யி‌ல் கைரா‌சியான, ‌சி‌ட்‌னியை‌ச் சே‌ர்‌ந்த இ‌ந்த ‌நிபுண‌ர், ‌மி‌ன்சாதன‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து வரு‌ம் க‌தி‌ர்‌வீ‌ச்‌சி‌ல் இரு‌ந்து ந‌ம்மை‌‌க் கா‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம் எ‌ன்று‌ம், அதுபோ‌ன்ற பொரு‌ட்களை ந‌ம்முடனேயே வை‌த்து‌க் கொ‌ண்டு வா‌ழ்‌க்கை‌யி‌ல் இதுபோ‌ன்ற சவாலை யாரு‌ம் ச‌ந்‌தி‌க்க வே‌ண்டா‌ம் எ‌ன்று‌ம் கூறு‌கிறா‌ர்.

‌உ‌ங்க‌ள் படு‌க்கை அறை‌யி‌ல் உ‌ள்ள ‌மி‌ன்சாதன‌ங்கள‌் எ‌ல்லா‌ம் தலை‌க்கு அருகே இ‌ல்லாம‌ல், கா‌ல் ப‌க்கமாக இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல் பார‌்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள் எ‌ன்று கூறு‌கிறா‌ர்.

அதாவது படு‌க்கை அறை‌யி‌ல் இரு‌க்கு‌ம் ‌மி‌ன்சார அலரா‌ம் பொரு‌த்‌த‌ப்ப‌ட்ட கடிகார‌ம், ரேடியோ, நை‌ட் லே‌ம்‌ப், ஏ‌சி போ‌ன்றவை.

அ‌வ்வாறு இ‌ல்லையெ‌னி‌ல், ‌இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் ‌மி‌ன்சாதன‌ங்க‌ளி‌ன் இணை‌ப்‌பை‌த் து‌ண்டி‌த்துவ‌ி‌ட்டு படு‌க்கை‌க்கு‌ச் செ‌ல்லு‌ங்க‌ள். அதுபோல மை‌க்ரோவே‌வி‌ல் சமைய‌ல் முடி‌ந்தது‌ம் 5 ‌பீ‌ப் ஒ‌லிக‌ள் வ‌ந்தது‌ம் உ‌ங்க‌ள் கைகளை உ‌ள்ளே‌ ‌‌வி‌‌ட்டு உணவு‌ப் பொரு‌ட்களை எடு‌க்கவு‌ம் எ‌ன்‌‌கிறா‌ர் அவ‌ர்.

மேலு‌ம், செ‌ல்பே‌சிக‌ளி‌ல் ஒரு நபரை அழை‌க்கு‌ம் போது அவ‌ர் இணை‌ப்‌பி‌ற்கு வரு‌ம் வரை செ‌ல்பே‌சியை உ‌ங்க‌ள் காதில் இரு‌ந்து ‌சி‌றிது தூர‌ம் நக‌ர்‌த்‌தி வை‌ப்பது‌ம், பொதுவாக ல‌வ்டு ‌ஸ்‌பீ‌க்க‌‌ரி‌ல் பேசுவது‌ம் உ‌ங்க‌ள் மூளையை‌க் கா‌ப்பா‌ற்‌றி‌க் கொ‌ள்ள உதவு‌ம் எ‌ன்‌கிறா‌ர் சா‌ர்‌லி டியோ.

மூளை‌யி‌ல் உ‌ண்டாகு‌ம் க‌ட்டிகளை அ‌க‌ற்று‌ம் அறுவை ‌சி‌கி‌ச்சைகளை வெ‌ற்‌றிகரமாக செ‌ய்து வரு‌ம் டியோ, தலை‌ முடிக்கு‌ப் ப‌ய‌ன்படு‌த்து‌ம் ‌சில ‌நிறமூ‌ட்டிகளு‌ம் (டை), கு‌றி‌ப்பாக ‌சிவ‌ப்பு ‌நிற மூ‌ட்டிக‌ள், மூளை‌ப் பு‌ற்றுநோ‌ய் ஏ‌ற்பட வா‌ய்‌ப்ப‌ளி‌க்‌கிறது எ‌ன்‌கிறா‌ர்.

முடி‌க்கு ‌நிறமூ‌ட்டுபவைக‌ள், செ‌ல்பே‌சிக‌ள் போ‌ன்றவை நேரடியாக மூளையை‌த் தா‌க்‌கி பா‌தி‌ப்பை ஏ‌ற்படு‌த்துவ‌தி‌ல் முத‌ன்மையாக செய‌ல்படு‌கி‌ன்றன எ‌ன்‌கிறா‌ர் இவ‌ர்.

ம‌ற்ற பு‌ற்றுநோ‌ய் செ‌ல்களை ‌விட, மூளை பு‌ற்றுநோ‌ய் செ‌ல்க‌ள் வேகமாக வள‌ர்‌‌கி‌ன்றன. அதாவது, மா‌ர்பக பு‌ற்றுநோ‌ய் செ‌ல்க‌ள் த‌ங்களது எ‌ண்‌ணி‌க்கையை ஒரு வார‌த்‌தி‌ல் அ‌ல்ல‌து ஒரு மாத‌த்‌தி‌ல் அ‌ப்படியே இர‌ட்டி‌ப்பா‌க்கு‌கி‌ன்றன. ஆனா‌ல் மூளை பு‌ற்றுநோ‌ய் செ‌ல்க‌ள் இதனை வெறு‌ம் 16 ம‌ணி நேர‌த்‌தில‌் நட‌த்‌தி‌விடு‌கி‌ன்றன. மேலு‌ம், மூளை‌யி‌ல் க‌ட்டி வளர எ‌ந்த வயது வர‌ம்பு‌ம், வயது‌த் தடையு‌ம் இ‌ல்லை.

முத‌லி‌ல் செ‌ல்பே‌சிக‌ளி‌ல் அலார‌ம் வை‌த்து‌வி‌ட்டு, அதனை தலையணை‌க்கு அடி‌யி‌ல் வை‌த்‌திரு‌க்கு‌ம் பழ‌க்க‌த்தை கை‌விடு‌ங்க‌ள் எ‌ன்‌கிறா‌ர் இவ‌ர்.

எவ‌ர் ஒருவ‌ர் 10 ஆ‌ண்டுகளு‌க்கு‌ம் மேலாக செ‌ல்பே‌சியை‌ப் பய‌ன்படு‌த்து‌கிறாரோ அவ‌ர்களு‌க்கு மூளை‌யி‌ல் ‌சில பா‌தி‌ப்புக‌ள் ஏ‌ற்படு‌கிறது எ‌ன்று‌ம், செ‌ல்பே‌சிகளை ஆ‌ண்க‌ள் த‌ங்களது பெ‌ல்‌ட் அதாவது இடு‌ப்பு‌ப் பகு‌தி‌யி‌ல் வை‌த்‌தி‌ரு‌ப்பதா‌ல் எலு‌ம்பு தொட‌ர்பான ‌பிர‌ச்‌சினைக‌ள் ஏ‌ற்படுவதை ஒரு ஆ‌ய்வு க‌ண்டு‌பிடி‌த்து‌ள்ளதையு‌ம் அவ‌ர் மே‌ற்கோ‌ள் கா‌ட்டினா‌ர்.

த‌ற்போது மூளை‌க் க‌ட்டிகளை அக‌ற்ற ப‌ல்வேறு ‌சி‌கி‌ச்சை முறைக‌ள் வ‌ந்து‌வி‌ட்டன. அதாது, மை‌க்ரோவே‌வ் ‌சி‌கி‌ச்சை போ‌ன்றவை நேரடியாக க‌ட்டிக‌‌ள் ‌மீது செலு‌த்த‌ப்ப‌ட்டு அவ‌ற்றை அ‌ழி‌க்கு‌ம் வகை‌யி‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. எதுவாக இரு‌ந்தாலு‌ம் ந‌ல்ல உணவு ம‌ற்று‌ம் பழ‌க்க வழ‌க்க‌ங்களா‌ல் உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌த்‌திரு‌ப்பதே ‌சிற‌ந்தது. வரு‌ம் மு‌ன் கா‌ப்பதே நல‌ம் எ‌ன்று ‌மீ‌ண்டு‌ம் ‌மீ‌ண்டு‌ம் எடு‌த்து‌க் கூ‌று‌கிறா‌ர் சா‌ர்‌லி டியோ.

நன்றி :
Maluhar
Hong Kong