الْحَمْدُ لِلّهِ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَجَعَلَ الظُّلُمَاتِ وَالنُّورَ ثُمَّ الَّذِينَ كَفَرُواْ بِرَبِّهِم يَعْدِلُونَ
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்;, இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான்;, அப்படியிருந்தும் நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு(ப் பிற பொருட்களைச்) சமமாக்குகின்றனர். (அல்குர்ஆன் 6:1)

சனி, 5 டிசம்பர், 2009

நன்றி:webdunia

இய‌ற்கை வைத்தியம்


கடு‌கி‌ன் மக‌த்துவ‌ம்
(வெள்ளிக்கிழமை 27 நவம்பர் 2009)
கடுகை தூ‌ள் செ‌ய்து வெ‌ந்‌நீ‌ரி‌ல் ஊற வை‌த்து வடி‌த்து கொடு‌க்க ‌வி‌க்கலை குணமா‌க்கு‌ம். கடுகை அரை‌த்து ப‌ற்‌றிட ர‌த்த‌க்க‌ட்டு, மூ‌ட்டு வ‌லி த‌ணியு‌ம். கை, கா‌ல்க‌ள் ‌சி‌ல்‌லி‌ட்டு ‌விரை‌த்து‌க் காண‌ப்ப‌ட்டா‌ல் கடுகை அரை‌‌த்து து‌ணி‌யி‌ல் தட‌வி கை, கா‌ல்க‌ளி‌ல் சு‌ற்‌றி வை‌க்க வெ‌ப்ப‌த்தை உ‌ண்டா‌க்கு‌ம். ‌உடனடியாக ‌விரை‌ப்பு ‌சீராகு‌ம். கடுகு, பூ‌ண்டு, வச‌ம்பு, கருவா‌ப்ப‌ட்டை, கழ‌ற்‌‌சி‌க்கா‌ய், கடுகு, ரோ‌கி‌ணி ஆ‌கியவ‌ற்றை சம அளவு ‌எடு‌த்து ‌நீ‌ர்‌வி‌ட்டு கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி இருவேளை ‌வீத‌ம் ஒரு வார‌ம் குடி‌த்து வர வாத‌ம், வா‌ய்‌வு, கு‌த்த‌ல் ‌பிர‌ச்‌சினை குணமாகு‌ம். கடுகு, ‌ம‌ஞ்ச‌ள் சம அளவு எடு‌த்து ந‌ல்லெ‌ண்ணெ‌யி‌ல் கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌க் கா‌தி‌ல் ‌சில சொ‌ட்டுக‌ள் இட தலைவ‌லி‌க்கு ‌நிவாரண‌ம் ‌கி‌ட்டு‌ம்


சே‌ற்று‌ப் பு‌ண்ணு‌க்கு இதமான மரு‌ந்து
(வியாழக்கிழமை 26 நவம்பர் 2009)
மழை‌க் கால‌ங்க‌ளி‌ல் ம‌னித‌ர்களை பெ‌ரிது‌ம் பா‌தி‌க்கு‌ம் நோய‌் சே‌ற்று‌ப் பு‌ண்ணாகு‌ம். இத‌ற்கு கை வை‌த்‌திய‌த்‌தி‌ல் ந‌ல்ல மரு‌ந்து உ‌ண்டு. அதாவது விளக்கெண்ணெயில் மஞ்சள் தூளைக் குழைத்து, சேற்றுப் புண்களில் தடவ ‌‌விரை‌வி‌ல் குணம் கிடைக்கும். வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை வேக வைக்கும் போது ஒரு ஸ்பூன் மோர் ஊற்றினால், அதன் நிறம் மாறாது. கல்லீரல் நோய்களை துளசிச் சாறு குணப்படுத்துகிறது. பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டு வர, நல்ல பசி உண்டாகும். வாழைப்பூவை, வாரம் ஒரு நாள் கூட்டாக செய்து சாப்பிட, வயிற்றுப்புண் வராது. வாழைப்பூ, கருப்பை கோளாறுகளை நீக்கும் தன்மை கொண்டது. சிறு நீரக கோளாறு இருப்பவர்கள், வாழைத் தண்டை சாறு எடு‌த்து அருந்த, பலன் கிடைக்கும்.


‌‌‌‌பி‌த்த‌ம், வாத‌த்‌தி‌ற்கு மரு‌ந்தாகு‌ம்
(புதன்கிழமை 18 நவம்பர் 2009)
ஆவாரை ‌பி‌த்த‌த்‌தி‌ற்கு‌ம், வாத‌த்‌தி‌ற்கு‌ம் அரு‌மரு‌ந்தாகு‌ம். ஆவாரை முழுச்செடியையும் நிழலில் உலர்த்தி சூரணமாக செய்து கொள்ளவும். இதனை 1-2 கிராம் அளவு மோரில் கலந்து உண்ண பித்தம் தணியும். பாலில் கலந்து உண்ண வாதம் தீரும். வெற்றிலைச் சாற்றில் உண்ண ஆஸ்துமா குணமாகும். அரிசி கழுவிய நீரில் உண்ண நீரிழிவு தீரும். நெய்யில் கலந்து உண்ண குஷ்டம் தீரும். கஞ்சியுட‌ன் சே‌ர்‌த்து உண்ண மயக்கம் தீரும். வெந்நீருடன் கலந்து உண்ண கழுத்துவலி தீரும். ஆவாரம் பூவுடன் பச்சைப்பயறு சேர்த்து பொடி செய்து தினமும் தேய்த்துக் குளித்துவர கடும்புள்ளி முகப்பரு போன்றவை நீங்கி தேகம் மினுமினுக்கும்.


தா‌ளி‌ப்பத‌ன் ப‌ய‌ன்பாடு
(வெள்ளிக்கிழமை 13 நவம்பர் 2009)
நா‌ம் சமை‌த்த உணவு எ‌ப்போது முழுமை பெறு‌கிறது தெ‌ரியுமா? அதனை தா‌ளி‌க்கு‌‌ம் போதுதா‌ன். எ‌ல்லா சாமா‌ன்களையு‌ம் ச‌ரியாக‌ப் போ‌ட்டாலு‌ம் தா‌ளி‌த்தா‌ல்தா‌ன் அ‌ந்த சமைய‌ல் ‌ரு‌சி‌க்கு‌ம். தா‌ளி‌ப்பது எ‌ன்பது பெரு‌ம்பாலான நா‌ட்டு உணவு முறைக‌‌ளி‌ல் ‌இ‌ல்லாத ஒ‌ன்றாகு‌ம். ஆனா‌ல் அ‌ந்த தா‌ளி‌ப்‌பி‌ல் எ‌த்தனை ரக‌சிய‌ங்க‌ள் ஒ‌ளி‌ந்‌திரு‌க்‌கி‌ன்ற எ‌ன்று உ‌ங்க‌ளு‌க்கு‌த் தெ‌ரியுமா? தா‌ளி‌க்கு‌ம் போது, கடுகு, ‌சீரக‌ம், உளு‌ந்த‌ம் பரு‌ப்பு, வெ‌ந்தய‌ம், க‌றிவே‌ப்‌பிலை போ‌ன்றவ‌ற்றை‌ப் போடு‌கிறோ‌ம். இ‌தி‌ல் ஒ‌வ்வொ‌ன்‌றிலு‌ம் ‌ஜீரண‌த்‌‌தி‌ற்கு‌ம், உட‌ல் நல‌த்‌தி‌ற்கு‌ம் ஏ‌ற்ற ‌நிறைய ‌விஷய‌ங்க‌ள் இரு‌க்‌கி‌ன்றன. ‌ஜீரண‌த்‌தி‌ற்கு உதவுவ‌திலு‌ம், மல‌‌ச்‌சி‌க்கலை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் க‌றிவே‌ப்‌பிலை உதவு‌கிறது. வெ‌ந்தய‌மு‌ம், உளு‌ந்த‌ம் பரு‌ப்பு‌ம் உடலு‌க்கு கு‌ளி‌ர்‌ச்‌சியை அ‌ளி‌க்‌கிறது. கடுகு‌ம், ‌சீரகமு‌ம் ‌‌ஜீரண‌த்‌தி‌ற்கு உதவு‌கிறது. எனவே, தா‌ளி‌ப்பதை ஏனோ தேனாவெ‌ன்று செ‌ய்யாம‌ல் எ‌ல்லாவ‌ற்றையு‌ம் ச‌ரியாக‌ப் போ‌ட்டு தா‌ளி‌த்து‌‌ச் சா‌ப்‌பிடு‌ங்க‌ள்.
க‌றிவே‌ப்‌பிலை‌ப் பொடி, துவைய‌ல் செ‌ய்யலா‌ம்
(வியாழக்கிழமை 12 நவம்பர் 2009)
க‌றிவே‌ப்‌பிலையை ந‌ன்கு த‌ண்‌ணீ‌ரி‌ல் கழு‌வி, அதனை வெறு‌ம் கடா‌யி‌ல் போ‌ட்டு சூடே‌ற்‌றினா‌ல் த‌ண்‌ணீ‌ர் பத‌ம் போ‌ய்‌விடு‌ம். அதனுட‌ன் ‌சி‌றிது உளு‌ந்து‌ம் பரு‌ப்பு, கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய், பெரு‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை வை‌‌த்து ‌மி‌க்‌சி‌யி‌ல் போ‌ட்டு பொடி செ‌ய்து கொ‌ள்ளு‌ங்க‌ள். இதனை சாத‌த்‌தி‌ல் ‌பிசை‌ந்து‌ம் சா‌ப்‌பிடலா‌ம், இ‌ட்‌லி‌க்கு‌ம் தொ‌ட்டு‌க் கொ‌ண்டு‌ம் சா‌ப்‌பிடலா‌ம். அவசர‌த்‌தி‌ற்கு‌ம் உத‌வு‌ம். ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌‌ற்கு‌ம் ‌சிற‌ந்தது. கறிவேப்பிலையையும், பச்சைக் கொத்தமல்லியையும் சேர்த்தும் துவையல் அரைத்து சாப்பிடலாம். கறிவேப்பிலையைப் போலவே, மல்லி இலையும் ஜீரண சக்திக்கு முக்கியப் பங்காற்றக்கூடியது. தவிர, கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும். உணவில் மட்டுமல்லாது, நமது புற ஆரோக்கியத்திற்கும் கறிவேப்பிலையின் பங்கு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.
க‌றிவே‌ப்‌பிலை‌யை எ‌ப்படி பய‌ன்படு‌த்துவது
(புதன்கிழமை 11 நவம்பர் 2009)
உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள் நிறைந்த சாறு, உணவில் முழுவதுமாக இறங்கி உணவுக்கு சுவை கூட்டுவதுடன், உடலுக்கு ஜீரணசக்தியை அளித்து பித்தம், வாயு, கபம் போன்றவற்றையும் போக்குகிறது. எந்த உணவானாலும், கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில், ஒன்றிரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பார்கள். இதனா‌ல் மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது. கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து மற்றும் வெந்தயத்தை வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து, மிளகாய் மற்றும் தேவையான உப்பைச் சேர்த்து சட்னியாக செய்து இட்லி, தோசை போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிடலாம். ‌ஜீரண ‌பிர‌ச்‌சினை உ‌ள்ளவ‌ர்க‌ளு‌க்கு ந‌ல்லது. கறிவேப்பிலை சட்னி சுவையைத் தருவதுடன் உடல் எடையை சீராக வைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.


ச‌ளி ‌பிடி‌த்தவ‌ர்க‌ள் செ‌ய்ய‌க் கூடாதவை
(திங்கள்கிழமை 9 நவம்பர் 2009)
ஆஸ்துமா நோய் உள்ளவர்கள், சளிபிடித்தவர்கள் ஆகியோர், தக்காளி, பூசணிக்காய், ஐஸ்கிரீம், முள்ளங்கி, நூல்கோல் ஆகியவற்றை உண்ணக் கூடாது. தலைக்கு அரப்பு, சீயக்காய் போட்டு குளிக்கக் கூடாது. மழை‌‌யி‌ல் நனைவதை‌த் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம். குடி‌நீரை கா‌ய்‌‌ச்‌சி வடிக‌ட்டி‌க் குடி‌க்க வே‌ண்டு‌ம். நாள்தோறும் ஒரு துண்டு பப்பாளி சாப்பிட்டு வர செரிக்கும் திறன் அதிகரிக்கும். தினசரி வாழைப்பழம் சாப்பிட, குடல்புண் மற்றும் சருமநோயை தடுக்கலாம். அருகம்புல் சாறை காலை வெறும் வயிற்றில் கால் அவுன்ஸ் குடித்து வர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர, இரத்தம் சுத்தமாகும்.
குல்கந்தின் பயன்கள்
(சனிக்கிழமை 7 நவம்பர் 2009)
‌சிலரு‌க்கு ‌பி‌த்த உட‌ம்பாக இரு‌க்கு‌ம். அ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் அதிக பித்த அளவை குறை‌க்க கு‌ல்க‌ந்து சா‌ப்‌பிடலா‌ம். வயிற்றுக் கோளாறுகளுக்கு‌ம் நல்லது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும். வலியுடன் கூடிய மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும். வெள்ளப்போக்கையும் குறைக்கும். பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதால், இதன் வடமொழி பெயர் தேவதாருணி (இளம்குமரி). தவிர குல்கந்து ஆண்மை ச‌க்‌தியை‌ப் பெருக்கி உடலுக்கு வலிமை ஊட்டும். ரோஜா இதழ்களில் உள்ள எண்ணை‌ய் த‌ன்மை ஆண்மையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. மல மிளக்கியாகவு‌ம் செயல்படு‌கிறது, குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது. பொதுவாகவே ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்து. முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.
மல‌ச்‌சி‌க்கலு‌க்கு மாமரு‌ந்து
(வெள்ளிக்கிழமை 6 நவம்பர் 2009)
ந‌ம் நா‌ட்டி‌ல் வளரு‌ம் பல தாவர‌ங்க‌‌ள் மருத‌்துவ குண‌ங்களை‌க் கொ‌ண்டு‌ள்ளன. அ‌தி‌ல் இலைக‌ள் ம‌ட்டும‌ல்லாம‌ல் மலர்களையும் பழங்களையும் பயன்படுத்திப் பல மருந்துகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ரோஜாப் பூ, உடலுக்கு குளிர்ச்சியை ஊட்டவல்லது. இதமான மலமிளக்கியாகவு‌ம் உ‌ள்ளது. கண்களுக்கு ரோஜா இதழ்களால் தயாரிக்கப்படும் பன்னீர் நல்லது. ஜீரண சக்தியை தூண்ட, உடலுக்கு வலிமை அளிக்க, புத்தி கூர்மையை கூட்ட, உடலில் துர்வாசனையை போக்கவு‌ம் ரோஜா பய‌ன்படு‌கிறது. யுனானி மரு‌த்தவ‌த்‌தி‌ல் குல்கந்து என்று சொல்லப்படும் மருந்து ரோஜா, பேரீச்சம் பழம் ஆகியவற்றிலிருந்து தயாரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. மலச்சிக்கலுக்குக் குல்கந்து ஒரு சிறந்த மருந்து. குடல் சம்பந்தமான வியாதிகளை இது குணப்படுத்துகிறது.
‌சில கை வை‌த்‌திய முறைக‌ள்
(புதன்கிழமை 4 நவம்பர் 2009)
‌திருமணமா‌கி இ‌ன்னு‌ம் குழ‌ந்தை இ‌ல்லாத பெ‌ண்களு‌க்கு ஒரு இய‌ற்கை வர‌ப்‌பிரசாதமாகு‌ம் தே‌ன். குழ‌ந்தை இல்லாத பெண்கள், தொடர்ந்து ஆறு மாதங்களுக்குத் தேன் சாப்பிட்டு வந்தால் கரு‌ப்பை ‌பிர‌ச்‌சினைக‌ள் ‌நீ‌ங்‌கி ‌விரை‌வி‌ல் குழந்தை பிறக்கும். காது அடை‌த்தது போ‌ல் இரு‌க்‌ந்து, எ‌ப்போது‌ம் அ‌தி‌ல் ஒரு சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கு‌ம். இ‌ப்படி இரு‌ப்பவ‌ர்க‌ள், நா‌‌ட்டு மருந்து கடையில் கடுகு எண்ணெய் விற்கிறார்கள். இதை ஒரு பாட்டில் வாங்கி வந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை, ஒரு கரண்டியில் எடுத்துக் கொண்டு சூடாக்குங்கள். இலேசான சூடுபோதும். இரைச்சல் கேட்கும் காதில் இரண்டு சொட்டு விடுங்கள். கா‌தி‌ல் இரு‌க்கு‌ம் அடை‌ப்புக‌ள் ‌நீ‌ங்கு காது சு‌த்தமாகு‌ம்.காது அடை‌ப்பு‌ம் ‌நீ‌ங்கு‌ம். எ‌‌ப்போது‌ம் தா‌ளி‌க்கு‌ம் போது கடுகு, ‌‌சீரக‌ம், க‌றிவே‌ப்‌பிலை‌ப் போ‌ட்டு‌த் தா‌ளி‌க்கவு‌ம். இவை மூ‌ன்று‌ம் ‌ஜீரண‌த்‌தி‌ற்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது. வாழைத்தண்டு, சிறுநீர்க் கோளாறுகளுக்கு மிகவும் நல்லது. சிறுநீர் கழிக்கச் சிரமப்படுகிறவர்கள் வாழைத் தண்டுக் கறி சமைத்து அடிக்கடி சாப்பிட வேண்டும்.


சுளு‌க்கு ‌வீ‌க்க‌த்‌தி‌ற்கு வை‌த்‌திய‌ம்
(வியாழக்கிழமை 29 அக்டோபர் 2009)
‌திடீரெ‌ன்று சுளு‌க்கு ஏ‌ற்ப‌ட்டு, அதனா‌ல் ‌வீ‌க்க‌ம் ம‌ற்று‌ம் வ‌லி ஏ‌ற்ப‌ட்டா‌ல் ‌பிர‌ண்டை ‌நி‌ச்சயமாக உதவு‌ம். ‌பிர‌ண்டையை இடி‌த்து, சாறெடு‌த்து, அதனுட‌ன் ‌சி‌றிது பு‌ளியு‌ம், உ‌ப்பு‌ம் சே‌ர்‌த்து குழ‌ம்பு பதமாக கா‌ய்‌ச்‌சி, பொறு‌க்க‌க் கூடிய சூ‌ட்டி‌ல் ப‌ற்று‌ப் போ‌ட்டு வர இர‌ண்டொரு நா‌ட்க‌ளி‌ல் குணமாகு‌ம். சு‌ளு‌க்கு ம‌ற்றும அடி ப‌ட்ட ‌வீ‌க்க‌ம் குணமாக, ‌பிர‌ண்டை வேரை ‌நிழ‌லி‌ல் ந‌ன்கு உல‌ர்‌த்‌தி, பொடியா‌க்‌கி, நெ‌ய் ‌வி‌ட்டு லேசாக வறு‌த்து 1-2 ‌கிரா‌ம் அளவு காலை மாலை ஆ‌கிய இரு வேளை உ‌ட்கொ‌ண்டுவரலா‌ம். ‌பிர‌ண்டை‌யி‌ல் கா‌ல்‌சிய‌ம் அ‌திக‌ம் இரு‌ப்பதா‌ல் எலு‌ம்பு வள‌ர்‌ச்‌சி‌க்கு அ‌திக‌ம் உதவு‌ம். எனவே, கா‌ல்‌சிய‌‌ம் குறைவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் ‌பிர‌ண்டையை அ‌திகமாக உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். ‌பிர‌ண்டை துவைய‌ல், ‌பிர‌ண்டை வ‌ற்ற‌ல் செ‌ய்து சா‌ப்‌பிடலா‌ம். ந‌ல்ல பல‌ன் ‌கி‌ட்டு‌ம்.


மாத‌வில‌க்கு வ‌லி குறைய
(செவ்வாய்கிழமை 27 அக்டோபர் 2009)
மாத‌வில‌க்கு சமய‌ங்க‌ளி‌ல் பெ‌ண்களு‌க்கு கடுமையான வ‌யி‌ற்‌று வ‌லி உ‌ண்டாகு‌ம். இத‌ற்கு வ‌லி ‌நிவாரண மா‌த்‌திரைகளை அ‌திக அள‌‌வி‌ல் பெ‌ண்க‌ள் சா‌ப்‌‌பிடுவா‌ர்க‌ள். இத‌ற்கு ‌வ‌லி ‌நிவார‌ணிக‌ள் உக‌ந்தது அ‌ல்ல‌. இத‌ற்கு ‌பிர‌ண்டை உ‌ப்பு ந‌ல்ல ‌தீ‌ர்வு அ‌ளி‌க்கு‌ம். நா‌ட்டு மரு‌ந்து கடைக‌ளி‌ல் ‌‌பிர‌ண்டை உ‌ப்பு எ‌ன்று கேட‌்டு வா‌ங்‌கி வை‌த்‌திரு‌ங்க‌ள். இதனை ‌தினமு‌ம் 250 ‌மி‌ல்‌லி ‌கிரா‌ம் அள‌வி‌ற்கு எடு‌த்து வெ‌ண்ணெ‌யில‌் குழை‌த்து ‌தினமு‌ம் இரு வேளை உ‌ட்கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம். இ‌வ்வாறு சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் மாத‌வில‌க்கு சம‌ய‌ங்க‌ளி‌ல் ‌ஏ‌ற்படு‌ம் வ‌யி‌ற்று வ‌லி பெருமளவு குறையு‌ம். இதே‌ப் ‌பிர‌ண்டை உ‌ப்பை 200 ‌மி‌ல்‌லி ‌கிரா‌ம் அளவு எடு‌த்து, ஜா‌தி‌க்கா‌ய் சூரண‌ம் 500 ‌மி‌ல்‌லி அளவுட‌ன் நெ‌ய்‌யி‌ல் குழை‌த்து இரு வேளை சா‌ப்‌பி‌ட்டு வர நர‌ம்பு‌த் தள‌ர்‌ச்‌சி குணமாகு‌ம்.


‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்
(வெள்ளிக்கிழமை 23 அக்டோபர் 2009)
அவரைப் பிஞ்சை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர, ரத்த அழுத்தம் விரைவாக குறையும். தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடிக்க, வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் ஆறும். மணத்தக்காளி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். பாகற்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வர, வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும். மஞ்சள், அருகம்புல் மற்றும் சுண்ணாம்பு கலந்து நகச்சுற்று ஏற்பட்டிருக்கும் விரலில் கட்ட நகச்சுற்று குணமாகும். அல்லது கொழுந்து வெற் றிலையுடன் சுண் ணாம்பு சேர்த்தும் கட்டலாம். வேப்பம் பூவை உலர்த்தி, தூள் செய்து, வெந்நீரில் கலந்து உட்கொள்ள, வாயுத் தொல்லை நீங்கும். வேப்ப எண்ணெயை காய்ச்சி,சேற்றுப்புண் உள்ள இடங்களில் தடவ குணம் கிடைக்கும்.
பா‌ட்டி சொ‌ன்ன ‌வீ‌ட்டு வை‌த்‌திய‌ம்
(வியாழக்கிழமை 22 அக்டோபர் 2009)
வெ‌ற்‌றிலையை‌ப் ‌பி‌ழி‌ந்து சாறு எடு‌த்து தே‌ன் கல‌ந்து அரு‌ந்‌தி வர ‌தீராத இரும‌ல் குணமாகு‌ம். அ‌திகாலை‌யி‌ல் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் வே‌ப்ப‌ங்‌கொழு‌ந்தை ‌தி‌ன்று வர வ‌யி‌ற்‌றி‌ல் உ‌ள்ள ‌கிரு‌மிக‌ள் ஒ‌ழி‌யு‌ம். இர‌ண்டு கர‌ண்டி க‌றிவே‌ப்‌பிலை சா‌ற்றை ஒரு ட‌ம்ள‌ர் மோ‌ரி‌ல் கல‌ந்து குடி‌த்தா‌ல் அ‌ஜீரண‌ம் ‌நீ‌ங்கு‌‌ம். ப‌ப்பா‌ளி‌‌த் பழ‌த் து‌ண்டை ப‌ல் வ‌லி உ‌ள்ள இட‌த்‌தி‌ல் அட‌க்‌கி வை‌க்க ப‌ல் வ‌லி ‌தீரு‌ம். ப‌ல் சொ‌த்தையான இட‌த்‌தில‌் ‌கிரா‌ம்பை நசு‌க்‌கி வை‌த்து, வா‌யி‌ல் வரு‌ம் உ‌மி‌ழ்‌நீரை வெ‌ளியே‌ற்‌றி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ல் ப‌ல் சொ‌த்தை காணாம‌ல் போகு‌ம். வா‌ந்‌தி எடு‌த்தவ‌ர்களு‌க்கு, வெறு‌ம் ‌சீரக‌த்தை வறு‌த்து அ‌தி‌ல் ‌நீ‌ர் ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க வை‌த்த ‌சீரக கஷாய‌‌த்தை‌க் கொடு‌க்க உடனடியாக வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம்


இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம‌்
(திங்கள்கிழமை 12 அக்டோபர் 2009)
த‌ற்போது பெரு‌ம்பாலான இளைய தலைமுறை‌க்கு தலையாய ‌பிர‌ச்‌சினையே தலை முடிதா‌ன். தலை முடி உ‌தி‌ர்வது, இள நரை, பொடுகு போ‌ன்றவைதா‌ன். இவை பெரு‌ம்பாலு‌ம், சு‌ற்று‌ச்சூழ‌ல் கெ‌ட்டிரு‌ப்பது ம‌ற்று‌ம் ப‌ணி‌ச் சுமை காரணமாக ஏ‌ற்படு‌கிறது. இளநரையைப் போக்கும் தன்மை இலந்தை இலைக்கு உண்டு. இதை நன்கு அரைத்து தலையில் தடவி 10 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலையை அலச இளநரை மாறும். இலந்தை இலையையும் சிறுகிளைகளையும் நன்கு அரைத்து கட்டிகள், கொப்புளங்களின் மீது வைத்துக் கட்ட அவை சீக்கிரம் பழுத்து உடையும். மேலு‌ம், இள நரை ஏ‌ற்ப‌ட்டது‌ம் மன‌ம் கல‌‌ங்‌கி‌விடாம‌ல், உண‌வி‌ல் அ‌திகமான அளவு க‌றிவே‌ப்‌பிலையை சா‌ப்‌பி‌ட்டு வர வெ‌ள்ளை முடிக‌ள் ‌மீ‌ண்டு‌ம் கரு‌ப்பாக மாறு‌ம்.
பு‌த்‌தி‌க் கூ‌ர்மை‌க்கு இல‌ந்தை பழ‌ம்
(வெள்ளிக்கிழமை 9 அக்டோபர் 2009)
மந்த புத்தியுள்ளவர்கள் இல‌ந்தை‌ப் பழ‌த்தை தொடர்ந்து உண்டு வர மூளை புத்துணர்வு பெறும். ஒரு கைப்பிடி இலந்தம்பழத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு அது 1_2 லிட்டராக சுண்டும் வரை கொதிக்க விட்டு தேன் அல்லது சர்க்கரை சேர்த்து எடுத்து வைத்து இரவில் படுக்கப் போகும் முன்பு இதை அருந்தி வர மூளை புத்துணர்ச்சி பெறும். பற்களில் ஏற்படும் கூச்சம், பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தக் கசிவு போன்றவைகளுக்கு இலந்தையை மென்று தின்பது நல்ல பலன் தரும். இ‌தி‌ல் கா‌ல்‌சிய‌ம் ச‌த்து அ‌திகமாக இரு‌ப்பதா‌ல் ப‌ற்க‌ள் ம‌ற்று‌ம் எலு‌ம்புகளு‌க்கு அ‌திக ந‌ன்மைகளை அ‌ளி‌க்‌கிறது. எலும்பு மற்றும் பற்களுக்கு உறுதியும், உடம்புக்கு பலமும் தரும் வகை‌யி‌ல் இ‌ல‌ந்தை பழ‌ம் அமை‌ந்து‌ள்ளது. எ‌ல்லா‌ப் பழ‌ங்களையு‌ம் உணவு‌க்கு மு‌ன்பு தா‌ன் சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். ஆனா‌ல் இல‌ந்தை‌ப் பழ‌த்தை பகல் உணவுக்குப் பின்பு உண்பதால் நன்கு ஜீரணமாவதும் பித்தமும் கட்டுப்படும்.


முக‌ப்பரு மறைய ‌மிளகு வை‌த்‌திய‌ம்
(வியாழக்கிழமை 1 அக்டோபர் 2009)
முக‌ப்பரு‌வி‌ற்கு பெ‌ண்க‌ள் எ‌த்தனையோ வை‌த்‌திய‌ம் செ‌ய்து‌ம் பல‌னி‌ல்லாம‌ல், வடு‌க்க‌ள் முக‌ம் முழுவது‌ம் இரு‌ந்து கொ‌ண்டே இரு‌க்கு‌ம். இதனை‌ப் போ‌க்க ‌மிளகை வை‌த்து கை வை‌த்‌திய‌ம் செ‌ய்யலா‌ம். அதாவது, ‌மிளகு, ச‌ந்தன‌ம், ஜா‌‌தி‌க்கா‌ய் ஆ‌கியவ‌ற்றை ந‌ன்கு அரை‌த்து முக‌ப்பரு‌வி‌ன் ‌மீது பூ‌சி வர வே‌ண்டு‌ம். முக‌ப்பரு ‌மீது பூ‌சி அ‌ப்படியே காய ‌வி‌ட்டு, அது உல‌ர்‌ந்தது‌ம் கு‌ளி‌ர்‌ந்த ‌நீ‌ரி‌ல் முக‌ம் கழு‌வி வர வே‌ண்டு‌ம். இ‌ப்படியே செ‌ய்து வ‌ந்தா‌ல் பெ‌ண்களு‌க்கு வரு‌ம் முக‌ப்பரு மறையு‌ம். மேலு‌ம், ஏ‌ற்கனவே இரு‌க்கு‌ம் முக‌ப்பரு வடு‌க்க‌ள் நாளடை‌வி‌ல் மற‌ை‌ந்து காணாம‌ல் போகு‌ம். இதனை க‌ண்க‌ளி‌ல் படாம‌ல் வை‌க்க வே‌‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.
சளி மற்றும் இருமலுக்கு உதவும் மிளகு
(புதன்கிழமை 30 செப்டம்பர் 2009)
சளி மற்றும் இருமலுக்கு மிளகு கைகண்ட மருந்தாகும். இரவில் தூங்கச் செல்லும் போது சிறிது சூடான பாலில் மிளகு தூள் சேர்த்து அருந்தி வர சளி மற்றும் இருமல் காணாமல் போகும். தூதுவளை இலை 4 அல்லது 5 எடுத்து அதில் மிளகை உள்ளே வைத்து வெற்றிலை போல மடித்து வாயில் போட்டு மென்று திண்ணால், நெஞ்சு சளி கரையும். வாய் ஓயாமல் இருமிக் கொண்டிருப்பவர்கள் இந்த வைத்தியத்தைச் செய்யலாம். வெற்றிலையில் 4 முதல் 5 மிளகை சேர்த்து சாப்பிட்டு வர, சிறு வண்டுகள் மற்றும் பூச்சிக்கடி குணமாகும். அருகம்புல்லுடன் மிளகு சேர்த்து கஷாயமிட்டு குடித்து வர, எல்லா வகை நஞ்சும் தீரும். ரத்தம் சுத்தமாகும்.


க‌றிவே‌ப்‌பிலை சா‌ப்‌பிடுவதா‌ல்

(புதன்கிழமை 23 செப்டம்பர் 2009)
நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையு‌ம், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல், ர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவு க‌ட்டு‌ப்படு‌ம். வெறும் வயிற்றில் ‌தினமு‌ம் கறிவேப்பிலை இலையை மெ‌ன்று சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். இ‌ப்படியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். சிறுநீரில் சர்க்கரை வெளியேறு‌ம் அளவு‌ம் குறை‌ந்து‌விடு‌ம். இளம‌் வய‌தி‌ல் நரை முடி வ‌ராம‌ல் தடு‌க்க க‌றிவே‌ப்‌பிலை பய‌ன்படு‌ம் எ‌ன்பது தெ‌ரி‌ந்த ‌விஷய‌ம். ஆனா‌ல் தெ‌ரியாத ‌விஷய‌ம் ஒ‌ன்று உ‌ள்ளது. அதாவது, நரை முடி வ‌ந்தவ‌ர்களு‌ம், உண‌விலு‌ம், த‌னியாகவு‌ம் க‌றிவே‌ப்‌பிலையை அ‌திகமாக சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் நரை முடி போயே போ‌ச்சு. இது அனுபவ ‌ரீ‌தியாக‌க் க‌ண்ட உ‌ண்மை.


பலாவை அதிகம் உண்ணக் கூடாது
(செவ்வாய்கிழமை 1 செப்டம்பர் 2009)
பலா பிஞ்சினை அதிகமாக உண்பதால் செரியாமை, வயிற்று வலி போன்றவை ஏற்படும். பலாப் பழத்தை அளவுடன்தான் சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால், வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் ஏற்படுத்தும். பலாப் பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டே சாப்பிட வேண்டும். குடல்வால் அழற்சி அதாவது அப்பன்டிசைட்டிஸ் உள்ளவர்கள் பலாப் பழத்தை சாப்பிடவேக் கூடாது. பலாக் கொட்டையை சுட்டு சாப்பிட்டால் அல்லு மாந்தம், மலச்சிக்கல், புளியேப்பம், கல் போன்று வயிறு கட்டிப்படல் ஏற்படும். பலாப் பிஞ்சினை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால் சொறி, சிரங்கு, கரப்பான், கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.


இரும்புச் சத்து நிறைந்த குங்குமப் பூ

(வியாழக்கிழமை 13 ஆகஸ்டு 2009)
பிரசவ வலி வந்தும், குழந்தை வெளியில் வராமல் இருக்குபோது, 4 கிராம் குங்குமப் பூவை பாலில் கரைத்து குடிக்கக் கொடுத்தால் உடனடியாக சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப் பூவை சேர்த்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். குழந்தை பிறந்ததும், 3 கிராம் குங்குமப் பூவை விழுதாக அரைத்து சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் அழுக்குகள் நீங்கும். அதிக வயதைக் கடந்தும் பூப்பெய்தாத பெண்களுக்கு தினமும் பாலில் குங்குமப் பூவை கலந்து கொடுத்து வந்தால் ஆறே மாதத்தில் பூப்படைவார்.


குங்குமப் பூவும்... மருத்துவமும்
(செவ்வாய்கிழமை 11 ஆகஸ்டு 2009)
கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப் பூவை சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பதெல்லாம் எ‌ந்த அடி‌ப்படை உ‌ண்மையு‌ம் இ‌ல்லாதது. குங்குமப் பூவில் இரும்புச் சத்து உள்ளது. எனவேதான் தாய்மார்கள் அதனை சாப்பிட வேண்டும் என்று இப்படி சொல்லி வைத்தார்கள். எட்டாம் மாத‌த்‌தி‌‌ல் கர்ப்பிணிகள் குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வர இரும்புச் சத்து உடம்பில் சேர்ந்து குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும். பொதுவாக பெண்கள் கர்ப்பம் தரித்துமே குங்குமப் பூவை சாப்பிடலாம். ஆனால் மசக்கைக் காரணமாக பால் பிடிக்காது என்பதால் மசக்கை வாந்தி நின்றதும் குங்குமப் பூவை சாப்பிடலாம். அத‌ற்காக கு‌ங்கும‌ப் பூவை அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டா‌ம். 4 அ‌ல்லது 5 துக‌ள்களை ம‌ட்டு‌ம் சூடான பா‌லி‌ல் போ‌ட்டு பா‌ல் ம‌ஞ்ச‌ள் ‌நிற‌ம் ஆனது‌ம் குடி‌த்து ‌விட வே‌ண்டு‌ம். அ‌வ்வளவுதா‌ன்.


நோய் எதிர்ப்புக்கு நெல்லிக்காய்
(வெள்ளிக்கிழமை 7 ஆகஸ்டு 2009)
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் ஒரு ஆப்பிளில் இருக்கும் முழு சக்தியும் ஒரு நெல்லிக்காயில் இருக்கிறது என்பது அறிவியல் உண்மை. நெ‌ல்‌லி‌க்காயை ‌பிறை ‌நிலா வடிவ‌த்‌தி‌ல் வெ‌ட்டி தே‌னி‌ல் ஊறவை‌த்து எடு‌த்து காயவை‌த்து ப‌த்‌திர‌ப்படு‌த்‌தி தேவை‌ப்படு‌ம்போது சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம். நெ‌ல்‌லி‌க்கா‌ய் ஊறுகா‌ய் போ‌ட்டு‌ம் சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம். நெல்லிக்காயில் அதிக மருத்துவ குணம் இருக்கிறது என்பது தெரியும். ஆனால் அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் விஷயங்கள் இருப்பது பலருக்குத் தெரிவதில்லை. மேலும், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும், உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் நெல்லிக்காய் சாப்பிடலாம்.


அரிசிக் கஞ்சியின் மகத்துவம்
(புதன்கிழமை 22 ஜூலை 2009)
சாதம் வடித்த கஞ்சியுடன் சிறிது உப்பு கூட்டி பருக, கண்ணெரிச்சல் நீங்கி குளிர்ச்சியடையும். உடல் உஷ்ணம் குறையும். பேதி ஏற்படும்போது அரிசிக் கஞ்சியில் உப்பு சேர்த்து குடித்தாலும், சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டாலும் நல்லது. இரவு வடித்த சாதத்தில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி மறுநாள் காலையில் அந்த நீரில் உப்பு சேர்த்து குடிப்பது அல்சர் போன்றவற்றிற்கு நல்லது. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரிசி கழுவிய நீரை லேசாக சூடுபடுத்தி கால் மற்றும் கைகளில் ஊற்ற எலு‌ம்பு பலம் பெறும்.
சாதம் எப்படி இருக்க வேண்டும்
(திங்கள்கிழமை 20 ஜூலை 2009)
புழுங்கலரிசி சாதம் அனைவருக்கும் ஏற்றது. புழுங்கலரிசி சாதத்தை சாப்பிடுபவர்களை வாத நோய் தாக்காது. குழைந்த சாதத்தையே சாப்பிட்டு வந்தால் பசி குறைவு ஏற்படும். இடுப்பு வலியுடன் கூடிய வெள்ளப்போக்கு, இருமல் உண்டாகும். தினமும் அதிக சூடான சாதத்தைச் சாப்பிட்டால், ரத்த கொதிப்பு, அடங்காத தாகம், நாவறட்சி உண்டாகும். தினமும் ஆறிப்போன சாதத்தை உண்டு வந்தால், கீல்வாதம் எனப்படும் மூட்டுவலி ஏற்படும். மிதமான சூடுள்ள சாதத்தை உண்பதே சிறந்தது. அதனால் வாத, பித்த, கப நோய்களையும், சைனஸ் நோயையும் போக்கும்.


உணவில் நெய் சேர்த்தால்
(புதன்கிழமை 15 ஜூலை 2009)
பகல் பொழுதில் உண்ணும் முதல் சாதத்தில் சிறிதளவு நெய் சேர்த்து உண்பது உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைக் குறைக்கும். மேலும், மலச்சிக்கல், பித்தம், வாதம், கப நோய்கள், சொறி முதலிய நோய்களும், சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தீரும். மாணவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும். மன உளைச்சல், வயிற்றெரிவு, எலும்புருக்கி, மூலரோகம், ரத்த வாந்தியும் நிற்கும். சருமம் பளபளப்பாகும். கண்களுக்கு அதிக திறனும் உண்டாகும்.

தே‌னி‌ன் மக‌த்துவ‌ம்
(திங்கள்கிழமை 13 ஜூலை 2009)
தேனின் மருத்துவ குணங்கள் அ‌திக‌ம். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி ச‌ளி பிடித்துக் கொள்கிறதா? அ‌த‌ற்கு‌ம் தே‌ன் ஒரு மரு‌ந்தாக உ‌ள்ளது. இளஞ்சூடான பாலில் சிறிது மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேனை கலந்து தினமும் பருகக் கொடுங்கள். நல்ல பலன் தெரியும். சூடான நீரில் ஒரு தே‌க்கர‌ண்டி இஞ்சிச்சாறு, எலுமிச்சைச்சாற்றுடன், ஒரு தே‌க்கர‌ண்டி தேன் சேர்த்தீர்களானால் இஞ்சிச்சாறு ரெடி. இது நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், தும்மல் போன்றவற்றிலிருந்து ‌நிவாரண‌ம் அ‌ளி‌க்கு‌‌ம். உட‌ல் மெ‌‌லி‌ந்தவ‌ர்க‌ள் ‌தினமு‌ம் பா‌லி‌ல் தே‌ன் கல‌ந்து சா‌ப்‌பி‌ட்டு வர உட‌ல் வாகு ‌சீராகு‌ம்.


‌கீரை சா‌ப்‌பிடு‌ங்க‌ள்
(வெள்ளிக்கிழமை 3 ஜூலை 2009)
அரைக் கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வர, உடல் வலிமை பெறும்; தலைமுடியும் நன்கு வளரும். அகத்திக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர, குடல் புண்கள் குணமாகும். வாரம் ஒரு முறை உண்பதால், வயிற்றில் காணப்படும் புழுக்கள் அழியும். பசலை‌ ம‌ற்று‌ம் வ‌ெ‌ந்தய‌க் ‌கீரையை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் உட‌ல் உஷ‌்ண‌ம் குறையு‌ம். பு‌ளி‌ச்ச‌க் ‌கீரை‌யி‌ல் அ‌திக இரு‌ம்பு ச‌த்து இரு‌ப்பதா‌ல் உ‌ட‌ல் பல‌வீனமானவ‌ர்க‌ள் உ‌ண்டு வ‌ந்தா‌ல் உட‌ல் பல‌ம் பெறு‌ம். தூதுவளை‌க் ‌கீரை ச‌ளி‌க்கு மரு‌ந்தாக அமையு‌ம், அதனை துவைய‌ல் செ‌ய்து சா‌ப்‌பிடலா‌ம்.


மசாலா‌ப் பொரு‌ளி‌ன் ம‌கிமை
(திங்கள்கிழமை 29 ஜூன் 2009)
இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா பொரு‌ட்க‌ளி‌ல் முத‌ல் இட‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர். நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை‌ தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்


உடலுக்கு உகந்த பாகற்காய்!
(வியாழக்கிழமை 25 ஜூன் 2009)
பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை. அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள். பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது. நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்.


எலு‌மி‌ச்சை‌யி‌ன் மக‌த்துவ‌ம்
(புதன்கிழமை 24 ஜூன் 2009)
மய‌‌க்க‌ம் ம‌ற்று‌ம் வா‌ந்‌தி ஏ‌ற்ப‌டு‌ம் போது எலு‌மி‌ச்ச‌ம் சாறை உ‌ப்பு ம‌ற்று‌ம் ச‌ர்‌க்கரை கல‌ந்து குடி‌ப்பது ‌நிவாரண‌ம் அ‌ளி‌க்கு‌ம். குறை‌ந்த ர‌த்த அழு‌த்த‌த்‌தினா‌ல் ஏ‌ற்படு‌ம் மய‌க்க‌த்‌தி‌ற்கு எலு‌மி‌ச்சை உடனடி பல‌ன் தரு‌ம். குளவி மற்றும் தேனி கடியால் ஏற்பட்ட வலிக்கு தனி எலுமிச்சம் பழச்சாறை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். எலுமிச்சம் பழச்சாறுடன் ஆலிவ் எண்ணையை சேர்த்து சாப்பிட்டால் பித்தக்கற்கள் கரையும். தினமும் புதிதாக பறிக்கப்பட்ட ஒரு எலுமிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்களை நீக்கி சுத்தப்படுத்தும்.


இ‌ஞ்‌‌சி‌யி‌ன் மக‌த்துவ‌ம்
(செவ்வாய்கிழமை 9 ஜூன் 2009)
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும். இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும். பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.


‌‌கிரா‌ம்‌பி‌ன் மரு‌த்துவ‌ குண‌ம்
(வியாழக்கிழமை 4 ஜூன் 2009)
கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது. நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும். சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது. கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும். முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.


மரு‌ந்து‌க்கு ப‌தி‌ல் ‌கீரை வா‌ங்கு‌ங்க‌ள்
(புதன்கிழமை 3 ஜூன் 2009)
காய்கறி வகைகளிலே கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மருந்துக் கடைகளுக்குச் சென்று அதிக விலை கொடுத்து சத்து மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக கீரை சாப்பிட்டால் போதும். தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும். விலையும் குறைவு. இதில் பக்க விளைவுக்கு இடமே இல்லை. அந்தளவுக்கு கீரைகளில் அற்புதமான மருத்துவ குணங்கள் பொக்கிஷமாக பொதிந்து கிடக்கின்றன. கீரை உணவு அனைவருக்கும் ஏற்றது. ஆனால் பெரும் பாலான குழந்தைகள் கீரையை பார்த்தால் ஏதோ இலை, தழை என்று நினைத்து பயந்து ஓடி விடுகின்றன. குழந்தைகள் மட்டுமல்ல, இளம் சிறுவர்களும், சிறுமிகளும் கூட கீரை வைத்தால் தொட்டு கூட பார்ப்பதில்லை. இதை பெற்றோர்தான் மாற்ற வேண்டும். சின்ன வயதில் இருந்தே குழந்தை களுக்கு கீரை உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும். கீரை உணவு எந்தளவுக்கு சாப்பிடுகிறோமோ, அந்தளவுக்கு ஆரோக்கியம் அமையும்.


தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய்
(வியாழக்கிழமை 21 மே 2009)
தலையை ந‌ல்ல முறை‌யி‌ல் கா‌க்க தேங்காய் எண்ணெய் மட்டுமே போதும். இர‌வி‌ல் படு‌க்க‌ப் போகு‌ம் மு‌ன்பு தேங்காய் எண்ணெயை இள‌ம் சூடான பத‌த்‌தி‌ற்கு‌க் காய்ச்சி தலையில் நன்றாகத் தேய்த்து பிறகு காலையில் தலையை அலசவும். வாரம் ஒரு முறை இதைச் செய்தால், முடியில் பிளவு மற்றும் பொடுகுகளையும் விரட்டலாம். தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் புறத்தோலை அடைத்து ‌விடுவதா‌ல் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளை தடு‌க்கு‌ம்.


திராட்சையின் மருத்துவ குணம்
(திங்கள்கிழமை 18 மே 2009)
ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு. உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம். திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறும்.
ப‌‌ற்களை‌ப் பாதுகா‌க்க

(வெள்ளிக்கிழமை 15 மே 2009)
புதினா இலையைக் காயவைத்து பொடி செய்து அதைக் கொண்டு பல்துலக்கி வந்தால் பற்கள் பளிச்சென மாறும். எலுமிச்சை சாற்றுடன் சமையல் உப்பை சேர்த்து பல் துலக்கி வந்தால் பற்களில் இருக்கும் மஞ்சள் கறை நீங்கி பற்கள் பளிச்சிடும். பச்சை நெல்லிக்காயை பற்களால் கடித்துத் தின்று வந்தால் பல்லில் உள்ள கறை நீங்கும். கேரட்டை சமைக்காமல் பச்சையாக உண்டு வந்தால் பற்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.


ஒ‌ற்றை‌த் த‌லைவ‌லி‌க்கு மரு‌ந்து
(புதன்கிழமை 13 மே 2009)
தலைவ‌லி வ‌ந்து‌வி‌ட்டா‌ல் எ‌ந்த வேலையு‌ம் ஓடாது. க‌ண்களு‌ம் நம‌க்கு உத‌வி செ‌ய்ய மறு‌த்து‌விடு‌ம். தைல‌ம் தே‌ய்‌த்து‌ம் பய‌ன் இரு‌க்காது, மா‌த்‌திரை போ‌ட்டு‌ம் இரு‌க்காது எ‌‌ன்ற ‌நிலையு‌ம் ஏ‌ற்படு‌ம். அ‌திலு‌ம் ஒ‌ற்றை‌த் த‌லைவ‌‌லி உ‌யிரையே எடு‌த்து ‌விடு‌ம். ஒற்றை தலைவலி உள்ளவர்களு‌க்கு இய‌ற்கை வை‌த்‌திய‌ம் ஒ‌ன்று உ‌ள்ளது. அதாவது பூண்டு ம‌ற்று‌ம் மிளகைத் தட்டி நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி ஆறிய பின் தலையில் தேய்த்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நா‌ர்ச‌த்து, ‌கீரைக‌ள் அவ‌சிய‌ம்
(செவ்வாய்கிழமை 12 மே 2009)
நார்ச்சத்து உ‌ள்ள உணவுகள் பெருங்குடலில் புற்று நோய் வராமல் தடுக்கும். கோதுமை, சோளம், கேழ்வரகு, கம்பு முதலியன நா‌ர்‌ச்ச‌த்து‌ள்ள உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ல் அடங்கும். கீரைகளில் கால்சியம், சோடியம், க்ளோரைன் எனப்படும் உலோகச்சத்து அதிகம் உண்டு. கீரையில் சக்கரை கிடையாது ஆகவே நீரிழவு நோயாளிகளுக்கும் இது உகந்தது. பூண்டும் மிகவும் நல்லது. கூடிய வரையில் ஆரோக்கிய உணவுப்பழக்கம் மேற்கொள்ளுதல் வியாதிகளை வர விடாமல் தடுக்கும். ‌ ‌வியா‌தி வ‌ந்த ‌பி‌ன் அத‌ற்கே‌ற்ற உணவுகளை க‌ட்டு‌ப்பா‌ட்டுட‌ன் சா‌ப்‌பிடுவதை‌க் கா‌ட்டிலு‌ம், வருவத‌ற்கு மு‌ன் ஆரோ‌க்‌கியமான உணவுகளை உ‌ண்பதே ‌சிற‌ந்தது.


முறையான நடைப்பயிற்சி
(செவ்வாய்கிழமை 5 மே 2009)
நாம் எதற்காக நடைப்பயிற்சி செல்கிறோமோ அந்த எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டும் என்றால் முறையான நடைப்பயிற்சி அவசியம். ஆண்கள் நிமிடத்திற்க 92 முதல் 102 அடி வரையும், பெண்கள் 91 முதல் 115 அடி வரையும் காலை எடுத்து வைக்க வேண்டும். சராசரியாக ஒருவர் ஒரு நிமிடத்திற்கு 100 அடிகள் எடுத்து வைத்து நடைப்பயிற்சி செல்ல வேண்டும். மிகவும் குண்டாக இருப்பவர்கள் வேகமாக நடைப்பயிற்சி சென்றால் முதுகுவலியும், கால் வலியும் தான் வரும்.
தர்ப்பூசணியை சாப்பிடுங்கள்
(திங்கள்கிழமை 4 மே 2009)
சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான். மலிவான விலையிலும், இணையில்லாத சுவையிலும் அமைந்திருக்கும் இந்த தர்ப்பூசணியை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் சாப்பிடலாம். வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்த தர்ப்பூசணியை மிக எளிதாக நமக்குக் கிடைக்கிறது. உடலில் வரும் வேர்க்குரு மீதும் தர்ப்பூசணி நீரை தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.


‌வீ‌ட்டிலேயே மரு‌ந்து‌ண்டு
(செவ்வாய்கிழமை 28 ஏப்ரல் 2009)
காய்ச்சிய பசும்பாலில் சிறிதளவு மிளகுத் தூளை போட்டு குடித்தால், இருமல் நிற்கும். பெண்கள் மாத விலக்கு ஆன தினங்களில், கத்தரிக்காய், பப்பாளி, எள் கலந்த பொருட்கள், அன்னாசி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. ரத்த சோகை நோயை தடுக்க, சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடலாம். அதிகமாக சாப்பிட்டால், சிலருக்கு வாதத் தொல்லை ஏற்படுத்தும்.
ப‌ச்சை‌க் கா‌ய்க‌றிக‌ள்
(திங்கள்கிழமை 27 ஏப்ரல் 2009)
பச்சை மஞ்சள் காய்கறிகள் பழங்கள் சிறந்தது இவைகளில் விட்டமின் ஏ, விட்டமின் சி அதிகம். விட்டமின் ஏ யில் பீட்டா கரோட்டின் உள்ளது இது ஒரு ஆண்ட்டி ஆக்ஸிடெண்ட். புற்று நோய் வராமல் தடுக்கும் குணம் கொண்டது. கேரட், தக்காளி பீட்ரூட், மாம்பழம், கொய்யா, ஆரஞ்சு, ஆப்பிள், எலுமிச்சை, நெல்லி, திராட்சை இவைகளில் இந்த சத்து அதிகம் அவைகளை அடிக்கடி சாப்பிட்டால் புற்று நோய் வரும் வாய்ப்பு குறைவு.
தர்ப்பூசணியை சாப்பிடுங்கள்
(சனிக்கிழமை 25 ஏப்ரல் 2009)
சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான். மலிவான விலையிலும், இணையில்லாத சுவையிலும் அமைந்திருக்கும் இந்த தர்ப்பூசணியை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் சாப்பிடலாம். வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்த தர்ப்பூசணியை மிக எளிதாக நமக்குக் கிடைக்கிறது. உடலில் வரும் வேர்க்குரு மீதும் தர்ப்பூசணி நீரை தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.


த‌யி‌ர்தா‌ன் ‌சிற‌ந்த மரு‌ந்து
(வியாழக்கிழமை 23 ஏப்ரல் 2009)
மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து. உணவை ஜீரணிக்க தயிர் உதவுவதோடு மட்டுமல்லாமல் வயிற்றின் வாயுத்தொல்லையிலிருந்தும் விடுவிக்கிறது. குடலில் சதை வளரும் `அப்பண்டிசைடிஸ்' மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் கிருமிகள் தயிர், மோர் இவற்றில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும். ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்


‌சுடு த‌ண்‌ணீ‌ர் குடியு‌ங்க‌ள்
(வியாழக்கிழமை 26 மார்ச் 2009)
சா‌ப்‌பி‌ட்ட சாத‌ம் நெ‌ஞ்‌சிலேயே இரு‌ப்பது போ‌ன்று தோ‌ன்‌றினாலோ, வெகு நேரமாக ப‌சி‌க்கு‌ம் உண‌ர்வு வராம‌ல் இரு‌ந்தாலோ உடனே சுடு த‌ண்‌ணீ‌ர் வை‌த்து‌க் குடியு‌ங்க‌ள். சுடு த‌ண்‌ணீ‌ர் ‌ஜீரண‌த்‌தி‌ற்கு‌ வ‌ழிவகு‌க்கு‌ம் ‌சிற‌ந்த பொரு‌ள். குழ‌ந்தைகளு‌க்கு கு‌ளி‌ர்பானமோ அ‌ல்லது ஐ‌ஸ்‌கி‌ரீமோ சா‌ப்‌பிட‌க் கொடு‌த்த உட‌ன், உடனடியாக சுடு த‌ண்‌‌ணீ‌ர் கொடு‌ங்க‌ள். இத‌ன் மூல‌ம் ச‌ளி ‌பிடி‌ப்பத‌ற்கான ‌கிரு‌மிக‌ள் அ‌ழி‌ந்து ‌விடு‌ம். வற‌ட்டு இரும‌ல், தொ‌ண்டை வ‌லி இரு‌ந்தா‌ல் தொட‌ர்‌ந்து சுடு த‌ண்‌ணீ‌ர் ‌குடி‌த்தா‌ல் போது‌ம்.


ச‌ளி‌த் தொ‌ல்லை‌க்கு
(புதன்கிழமை 4 மார்ச் 2009)
சளி தொல்லை இருந்தால் வீட்டு வைத்தியம் செய்யலா‌ம். கு‌ளியலறை‌யி‌ல் ஷவ்ரில் சூடான த‌ண்‌ணீரை திறந்து விட்டு ஐந்து நிமிடம் கழிந்து உள்ளே போய் நி‌ன்றா‌ல் முக்கடைப்பு போய்விடும். அ‌ல்லது ஒரு பக்கெட்டில் சுடுத‌ண்‌ணீ‌ர் நிரப்பி விட்டு பெ‌ட்ஷீட் போட்டு தலை எல்லாம் ந‌ன்றாக மூடி முகத்தை ஆ‌வி ‌பிடி‌‌த்தா‌ல் உடன் நிவாரண‌ம் ‌கி‌ட்டு‌ம்.


இயற்கையோடு இணைந்த ஆயுர்வேத சிகிச்சை
(செவ்வாய்கிழமை 3 பிப்ரவரி 2009)
ஆயுர்வேத மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் என தரமான முறையில் உருவெடுத்துள்ளன. எளிய, செலவு குறைந்த, பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை என்பதாலும், மருந்துகளும் அங்கேயே வழங்கப்படுவதாலும் பொது மக்களிடையே ஆயுர்வேதத்திற்கு சமீபகாலமாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
உடல் செயல்பாட்டை ஊக்குவிக்கும் பழங்கள்
(வியாழக்கிழமை 29 ஜனவரி 2009)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிப்பவை பழங்கள் எனலாம்.
அளவோடு சாப்பிடுவோம்!
(புதன்கிழமை 28 ஜனவரி 2009)
நமது உடல் ஒரு நீராவி எஞ்சின் போன்றது எனலாம். சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்கள் நிலக்கரி என்று வைத்துக் கொண்டால், அந்த கரி எரிந்து உருவாகும் நீராவியே நமது உடலுக்கு கிடைக்கக்கூடிய சக்தி.
குழந்தைப்பேறு தரும் செவ்வாழைப்பழம்
(சனிக்கிழமை 17 ஜனவரி 2009)
தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படாது.
புற்றுநோயைத் தடுக்கும் கேரட்
(சனிக்கிழமை 17 ஜனவரி 2009)
கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.


மருத்துவ குணம் நிறைந்த தேங்காய் எண்ணெய்
(சனிக்கிழமை 23 ஆகஸ்டு 2008)
தேங்காயானது சமையலுக்கு பல விதங்களில் பயன்படுகிறது. தேங்காய் பருப்பை காயவைத்து அதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மிகச் சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது.
சுறுசுறுப்பளிக்கும் `சுக்கு வெந்நீர்'
(வியாழக்கிழமை 14 ஆகஸ்டு 2008)
வீடுகளில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
மூலிகை மருந்து - பல்கலை ஆராய்ச்சி!
(செவ்வாய்கிழமை 5 ஆகஸ்டு 2008)
மூலிகை மருந்துகளை வர்த்தக ரீதியாக பிரபலப்படுத்தும் ஆய்வை வித்யாசாகர் பல்கலைக் கழகம் மேற்கொள்கிறது.
ஜீரண சக்தியை தூண்டும் இஞ்சி
(வெள்ளிக்கிழமை 1 ஆகஸ்டு 2008)
அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள். இஞ்சியின் மருத்துவ குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல். ஆகும்.
வாயுத் தொல்லையைப் போக்கும் வெள்ளைப் பூண்டு
(சனிக்கிழமை 26 ஜூலை 2008)
வாயுத் தொல்லை என்பது பொதுவாக 35 வயதைக் கடந்த அனைத்து தரப்பினருக்குமே இருக்கக்கூடிய ஒரு இன்னல் எனலாம்.